TN Circle - LSG list dated 07.07.2020 kept in abeyance

TN Circle - LSG list dated 07.07.2020 kept in abeyance




07/07/2020 அன்று வெளியிடப்பட்ட LSG. List நிறுத்திவைப்பு 


அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 


தற்போது மாநில நிர்வாகத்தினால் 07.07.2020 அன்று வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள பிரச்னைகள் குறித்து தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் 08.07.2020 ல் DPS HQ. APMG அவர்களை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்து விரிவாகப் பேசினோம் இது குறித்து மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட எல்லா பிரச்சனைகள் குறித்தும் அந்த கடிதத்தில் மாநில சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது


DPS HQ அவர்களும் இது குறித்து அனைத்து பிரச்னைகள் மீதும் உரிய பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று
உறுதி அளித்தார். இன்று சிபிஎம்ஜி அவர்களை சந்தித்து இது சம்பந்தமாக அழுத்தம் கொடுத்தோம்

தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் கோரிக்கையை ஏற்று 07.07.2020 வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வு பட்டியலை(Kept on hold) தற்காலிகமாக நிறுத்திவைத்து தமிழ் மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்த CPMG. அவர்களுக்கும் DPS HQ /. APMG Staff அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


தோழமையுள்ள , 


A. வீரமணி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று ,

Post a Comment

Nuwer Ouer

Iklan In-Feed (homepage)